
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகள், திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதை போல் கோவில்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட வேண்டுமென பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன்படி இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் தமிழகத்தின் 12 முக்கிய கோவில்கள்முன்பாகஇந்த போராட்டம் நடைபெற்றது.
சென்னைபிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவில் சாலையின் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலைகலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ''இல்லாத கரோனாவை காரணம் காட்டி, நமக்கு நம்முடைய உரிமை மறுக்கப்படும் பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு வேறுவழியில்லை;இதை மக்கள் போராட்டமாக நடத்த வேண்டிய கட்டாயம்.கோவிலை மூடுவதற்கு ஒரு காரணம் சொல்கிறீர்கள். ஆனால் சினிமா தியேட்டரை திறப்பதற்கு நீங்கள் சொல்கின்ற காரணம் விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசின் ஆலோசனையைவைத்து இவர்கள் காரணம் காட்டுகிறார்கள். அதுவும் பொய் என்று நமக்கு தெரியும். ஏனென்றால் தேவைப்படும் பொழுது அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும், தேவைஏற்படவில்லை என்றால் மத்திய அரசை மோசமாக பேசுவதும் திமுகவுக்கு கைவந்த கலை''' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)