Advertisment

''இன்னும் விசாரணை ஆரம்பிக்கவில்லை''-கூடுதல் மனுதாக்கல் செய்த சி.வி.சண்முகம்

'Investigation not yet started' - CV Shanmuga who filed additional petition

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஓபிஎஸ் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில், மோதலின் பொழுது முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மோதல் காரணமாக இருதரப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் எனும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்ட பின்னரும் விசாரணை துவங்கவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தகுந்த உத்தரவுகளை தமிழக டிஜிபி வழங்கவேண்டும். அப்படி டிஜிபி உத்தரவிட தவறினால் வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

highcourt admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe