பழ. கருப்பையா கட்சிக் கொடி அறிமுகம்

முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா தான் துவங்கிய கட்சிக்கு இன்று கொடியை அறிமுகப்படுத்தினார்.

முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ எனும் புதிய கட்சியைத் துவங்கியுள்ளார். கட்சியின் பெயரை அறிவித்த பின் பழ. கருப்பையா செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நேர்மை, எளிமை, செம்மை என்ற கொள்கையின் அடிப்படையில் ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளோம். அதன் பொருட்டுநாளை மறுநாள் மாநாடு நடத்தப் போவதாகக் கூறியிருந்தார். மேலும் அதுதொண்டர்களுக்கு மட்டுமான மாநாடு எனவும்பொதுமக்களை அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறியிருந்தார். அதில் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் உறுப்பினர் மாநாடு நடைபெற்றது. இதில் தனது கட்சியின் கொடியை பழ. கருப்பையா அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தில் உள்ள பசுமை தமிழ்நாட்டின் வளத்தையும் அதன் சிறப்பையும் காட்டுகிறது. அதன் நடுவில் தமிழ்நாட்டின் படம். அதற்குள் காந்தி நடக்கிறார். எங்களுக்கு தமிழ், தமிழர் நலன், தமிழ்நாடு என்பது முதன்மையானது. எங்களை நெறிப்படுத்தி வழி நடத்துபவர் காந்தி. தமிழ்நாட்டு அளவிற்குத்தான் எங்களால் பாடுபட முடியும். இந்தியாவிற்கு முடியாது” எனக் கூறினார்.

PALA KARUPPAIH thamilnadu thannurimai kazhagam
இதையும் படியுங்கள்
Subscribe