Advertisment

''ஏன் செங்கல்லை பிடிக்கப் போகிறாரா அண்ணாமலை? ''-அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி! 

Interview with Minister P. Murthy!

மத்திய அரசு 28 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசுக்கு கொடுக்கவில்லை. அதை கொடுத்தாலே தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் என வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர் சங்க அரங்கில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க விழா நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ''ஓராண்டு காலத்தில் அத்தனை துறையிலும் பல்வேறு வகையால் வேலைவாய்ப்பு, பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளோம். கோடிக்கணக்கானை நிதி மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி தந்துள்ளோம். என்னென்ன செய்தோம் என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கினார். 10 ஆண்டுகாலம் செய்ய முடியாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம். மின்சாரம் கொடுக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் என சி.டி ரவியின் கருத்துக்கு (பாஜக) எந்தந்த வகையில் இடையூறு செய்தாலும் அதையெல்லாம் முறியடித்துதான் ஓராண்டு காலத்தில் முதல்வர் பணி செய்துள்ளார். மத்திய அரசு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை. இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின் பகிர்வு பற்றாக்குறை குறித்து முதல்வர் தெளிவாக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார். வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் தான் அவர்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் துணைத்தலைவர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்துகொண்டே தெரியாதது போல பேசுகிறார்'' என்றார். லூலூ மாலின் ஒரு செங்கல்லை கூட அனுமதிக்க மாட்டோம் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு, ''ஏன் செங்கல்லை போய் பிடிக்க போறாரா? அண்ணாமலை'' என்றார்.

''இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைச் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உதவிகளைச் செய்ய முன்வந்தவர் முதல்வர். வாயில் சொல்வது எளிது ஆனால் சொன்னதை செய்பவர் முதல்வர். தமிழக முதல்வர் தான் தமிழக மக்களுக்குச் செய்ய முடியும். தமிழ்நாடு பங்கீடு நிதிகளைப் பெற்றுக்கொண்டு, 1 ரூபாய் பெற்றுக்கொண்டு 35 பைசா கொடுக்கின்றனர். வணிகவரித்துறையில் முழுமையான வரி வருவாயை கொடுத்தாலே தமிழக அரசு இன்னும் சேவை செய்யும். தமிழக பணத்தைப் பெற்றுக்கொண்டு அதை திருப்பிக் கொடுக்காமல் இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே. இன்னும் மத்திய அரசு தர வேண்டிய 28 ஆயிரம் கோடியை இன்னும் தரவில்லை. என்னத்தயாவது பேசுகிறார்கள்.பத்தாண்டுகளில் 6 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றுவிட்டு, அதற்கு நாங்கள் வட்டியும், கடனும் கட்டிக் கொண்டுள்ளோம். முதலமைச்சர் செய்துள்ளார். அதற்கு இணையாக அவர்கள் என்ன செய்தார்கள் என சட்டமன்றத்தில் பேச சொல்லுங்கள்'' என்றார்.

police madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe