Advertisment

தமிழக பாஜகவில் உட்கட்சி பிரச்சனை?-தனித்தனியாக நடந்த சந்திப்புகள்

nn

Advertisment

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துள்ளனர். இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக பாஜகவின் மைய குழு கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார்.

மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள அமித்ஷா அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். முன்னதாக தமிழக பாஜகவின் இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. உட்கட்சி சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்காக அமித்ஷா தமிழகம் வந்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

காரணம் அதிமுக கடந்த காலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கு முன்னாள் தமிழக பாஜக தலைவரே காரணம் என பொதுப்படையாக பேசப்பட்டது. அன்றைய பாஜக தலைவரை பொறுப்பில் இருந்து அவரை நீக்கும்வரை அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாது என்ற கருத்தும் இருந்தது. அதன் பின்னரே தமிழக பாஜகவின் தலைவர் மாற்றப்பட்டு அதிமுக பாஜக கூட்டணிக்குள் வந்திருந்தது. அதேநேரம் பாஜக முன்னாள் தலைவரை மாற்றியதற்கு தற்போது வரை தமிழக பாஜகவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் உட்கட்சி மோதல் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் பாஜக அதிமுக கூட்டணி அமைந்த பிறகு களநிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்தும் அமித்ஷா நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல ஒரு சில கட்சிகளை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் பாஜகவின் மையக்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் அதில் உட்கட்சி சார்ந்த பிரச்சனைகள்; கூட்டணி தொடர்பான பிரச்சனைகள்; பூத் கமிட்டிகுறித்து விவாதிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

amithshah madurai nayinar nagendran
இதையும் படியுங்கள்
Subscribe