ADVERTISEMENT

இந்த உளவுத்துறை இருக்கிறதே... நிர்வாகிகள் மத்தியில் டிடிவி தினகரன் பேச்சு...

03:26 PM Jun 22, 2019 | rajavel

ADVERTISEMENT

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதில், கலந்து கொண்ட பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மே 23ஆம் தேதி தேர்தல் முடிவு வந்தது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று எல்லோரையும்போல் எனக்கும் வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனால் நமது தோல்விக்கு என்ன காரணம் என்று தெரிந்த பிறகு நாம் அதையெல்லாம் மறந்துவிட்டு மற்ற பணிகளை தொடங்கிவிட்டேன்.



திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் நிர்வாகிகள் கடைசி மூன்று வாரம் கடுமையாக உழைத்தார்கள். சாருபாலா தொண்டைமான் சொன்னதைப்போல நிர்வாகிகள் தாங்களே வேட்பாளர்களைப்போல இரண்டு பாராளுமன்றத் தொகுதியிலும் கடுமையாக உழைத்தார்கள்.
இந்தக் கட்சியை பார்த்து சிலர் லெட்டர் பேடு கட்சி என்கிறார்கள். இந்த கட்சியில் உள்ளவர்களை வீடு வீடாக சென்று வாங்க வாங்க என்று கூப்பிடுகிறார்கள். இந்த இயக்கத்தில் மேலே இருந்து இயக்கிக்கொண்டிருக்கும் நிர்வாகிகள் வேண்டுமானாலும் போகலாம். சிலர் சுயநலமாக இருப்பார்கள். ஆனால் அடிமட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் இந்த இயக்கத்தை விட்டு போகமாட்டார்கள்.

இந்த இயக்கம் தொடங்கி ஒரு ஆண்டுதான் ஆகியுள்ளது. கிளைகள் இல்லாத ஊரே இல்லை என்று கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் சேர்க்கையும் சிறப்பாக சேர்த்துள்ளார்கள். திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் நாம் வெற்றி பெறுவோம் என்று நாம் மட்டுமல்ல தமிழ்நாடே எதிர்பார்த்தது. காரணம் நல்ல வேட்பாளர். அதுபோல பெரம்பலூர் தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று எல்லோரும் எதிர்பார்த்ததுதான்.

இந்த உளவுத்துறை இருக்கிறதே நாட்டில் எத்தனையோ லா அண்டு ஆர்டர் பிரச்சனை நடக்கிறது, கொலை நடக்கிறது அதையெல்லாம் பார்ப்பதைவிட்டுவிட்டு, ஒவ்வொரு ஊருக்கும் சென்று அமமுக நிர்வாகிகளை பார்த்து பேசி அதிமுகவுக்கு வாருங்கள் என்று புரோக்கர் வேலை பார்க்கிற அளவுக்கு போய்விட்டது உளவுத்துறை.


நாங்குனேரி, களக்காடு அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் கிறிஸ்டல் தலைமையில் 100 பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் என்று டிவியில் போட்டோவை காண்பித்தனர். நம்ம கட்சியில் பொறுப்பாளர் என்கிற பதவியே கிடையாது. மண்டல பொறுப்பாளர்தான் இருக்கிறார்கள். நான் இதுகுறித்து விசாரித்தேன். அதற்கு பிறகு அந்த கிறிஸ்டல் திரும்பவும் வந்துவிட்டார். ஏதோ கான்ராக்ட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

இன்பத்தமிழனை பலமுறை கண்டித்துள்ளேன். தாமரைக்கனி மகன் என்ற மரியாதைக்காக பதவி கொடுத்து வைத்தோம். மகளிர் அணியில் உள்ள காய்கறி கடை வைத்துள்ள பெண்மணியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார். உண்மையாகவே பாப்புலர் முத்தையாவை நாமாகவே கட்சியைவிட்டு எடுக்கக்கூடாது என்று நினைத்தோம். இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT