Skip to main content

அவமதிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; கர்நாடகத்தில் பாஜக செயலால் அதிர்ச்சி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Insulted Tamil Thai greeting; Shocked by BJP action in Karnataka

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

தமிழ்நாடு பாஜக தலைவர்களும் கர்நாடகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்கள் முன் பாஜகவினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதால் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையை தேர்தல் முடியும் வரை கர்நாடகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திடம் மாநில காங்கிரஸ் கமிட்டி புகார் அளித்திருந்தனர்.

 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவமோகா நகரில் தமிழர்களிடையே வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்துப் பாடலைப் பாட வைத்துள்ளார் ஈஸ்வரப்பா.

 

 

சார்ந்த செய்திகள்