Skip to main content

நான் விளையாடி இருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்: சான்ஸ் வாங்கிக்கொடுங்க: ஜெயக்குமார்

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 

அழகுமுத்து கோன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

jayakumar



இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், நேற்று இந்திய கிரிக்கெட் அணி தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ''நிச்சயமாக நான் விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும். எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக்கொடுங்களேன். அரசியலிலும், விளையாட்டிலும் வெற்றி தோல்வி என்பது சகஜம். இன்று தோல்வி நாளை வெற்றி. எப்படி எங்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதோ, அதைப்போலவே இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறும். அதிமுக தமிழ்நாட்டில் என்றும் வெற்றி பெறும். ஓ.கே.'' எனக் கூறி விடைப்பெற்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணி தைத்து கொடுத்து அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24)  வடசென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரம்பூர் வியாபாரிகள் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து அவர், ஓட்டேரியில் உள்ள தையல் கடையில் துணி தைத்துக் கொடுத்து வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு வாக்கு சேகரித்தார். 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.