விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து அவர் பேசியது,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னம் கொடுக்க வாய்ப்பில்லை, தினகரனின் குடும்பத்தினரே அவரை மதிக்க மாட்டார்கள், அதிமுகவை நாங்கள் யாரிடமும் அடகு வைக்கவில்லை, அதிமுகவை பாதுகாப்பான பெட்டகத்தில் வைத்துள்ளோம், தமிழகத்தின் பாதுகாவலராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் எனக்கூறினார், மேலும் அவர் இந்தியாவை பாதுகாக்கும் ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ மோடி என்றும், இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் அதை மல்லுக்கட்டி தடுக்கக்கூடிய மனிதர் அவர் என்றும் கூறினார். முன்பு ஒரு பேட்டியில் மோடியை ‘டாடி’ எனக்கூறியதும் இவரே.