Skip to main content

பஞ்ச பாண்டவர்களின் பெயர்களை எழுதி வாக்கு கேட்கும் சுயேட்சை வேட்பாளர் 

Published on 08/04/2019 | Edited on 08/04/2019


 

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் குப்பல்ஜி. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இவர் வேட்பு மனு தாக்கலின்போது, சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி 13-வது மண்டல அலுவலகத்திற்கு டெபாசிட் தொகையான ரூபாய் 25 ஆயிரத்தை சில்லரையாக கொண்டு வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் தேர்தலில் இவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து அவர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனது காரில் பானைகளை கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பானைகளில் சகாதேவன், அர்ச்சுனன், தருமர், பீமன், நகுலன் ஆகியோரின் பெயர்களை எழுதி, அவர்களின் ஆசியோடு போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார். 

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார்.