Advertisment

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சுயேச்சை கவுன்சிலர்கள்

independent candidate join dmk

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதன்கிழமை (08-01-2020) மாலை அவரது இல்லத்தில், நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற, தஞ்சை வடக்கு மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய 18வது வார்டு சுயேச்சை உறுப்பினர் மு. சபியா பானு தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் எம்.இராமச்சந்திரன், சாக்கோட்டை அன்பழகன், நீலமேகம், ஆகியோர் உடனிருந்தனர்.

independent candidate join dmk

Advertisment

இதேபோல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதன்கிழமை (08-01-2020) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற, புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய 4வது வார்டு சுயேச்சை உறுப்பினர் வளர்மதி முருகேசன் தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.இரகுபதி, எம்.எல்.ஏ., புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், பொன்னமராவதி தெற்கு ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூர்ச் செயலாளர் அழகப்பன், புதுக்கோட்டை நகர முன்னாள் செயலாளர் அரு.வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Independent candidate join pudukkottai Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe