Advertisment

இடைத்தேர்தலில் சீமானை முந்திய ஹரி நாடார்... ஹரி நாடார் வாங்கிய வாக்குகள் எவ்வளவு தெரியுமா? 

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை. விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 69,829 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 42,849 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,789 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் சுமார் 26,980 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை. நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 28,974 வாக்குகளும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 18,601 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 578 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 10,373 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Advertisment

by electionhari nadar

இந்த நிலையில் நாங்குனேரியில் தற்போது நிலவரப்படி சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா நாராயணன் 936 வாக்குகள் பெற்றுள்ளார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ. ஹரி நாடார் 1236 வாக்குகள் பெற்றுள்ளார். சீமான் கட்சி தற்போது நிலவரப்படி 1.83% சதவிகித வாக்குகளும், ஹரி நாடார் கட்சி 2.37% சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியை விட 300 வாக்குகள் கூடுதலாக ஹரி நாடார் தற்போது நிலவரப்படி பெற்றுள்ளார். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

byelection hari nanguneri ntk seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe