Advertisment

10 மடங்கு மின் கட்டண உயர்வு! ஆய்வு செய்யாவிட்டால் அலுவலகத்தைப் பூட்டும் போராட்டம்... த.வா.க எச்சரிக்கை!

புதுச்சேரியில் கரோனா நோய்ப்பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. அதே சமயம் 4 மாதங்களாக மின் பயன்பாடு குறிக்காத நிலையில் மின் கட்டணம் கட்டுவதற்கும் தளர்வு அளிக்கப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்தும் பயணாளிகளுக்கு (மாதம்தோறும் ரூபாய் 500, ரூபாய் 1,000 கட்டணம் செலுத்தியவர்களுக்கு) தற்பொழுது ரூபாய் 5,000, 10,000 என 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. இதைக் கண்டித்து தட்டாஞ்சாவடியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் பொறியாளரைச் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அதன் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் புகார் தெரிவித்தனர்.

Advertisment

மேலும் கடந்த 4 மாதங்களாக மின் பயன்பாட்டு அளவு குறிக்காததாலும், ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்ட கட்டணங்கள் பதிவேற்றம் செய்யப்படாததாலும், டிஜிட்டல் மீட்டர்கள் ஜம்ப் ஆவதாலும் இதுபோன்று மிக அதிகப்படியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

எனவே உடனடியாக புதுவை அரசு மின் கட்டணத்தை ஆய்வு செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை இழுத்துப் பூட்டும்,போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

EB bill increase
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe