
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் அனைத்திலும் சரியாக இருக்கிறோம் என்றால் நாம் சோதனையை அனுமதிக்க வேண்டும். மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே. சோதனை செய்யும்போது அதை தடுப்பது என்றால் அங்கு ஏதோ தவறு உள்ளது என தெரிகிறதே. வீட்டிற்குள் ஒன்றும் இல்லை என்றால் திறந்து காட்ட வேண்டியது தானே.
வருமான வரிச் சோதனை வருவதாக சொல்கிறார்கள். அங்கு என்ன சோதனை செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள். கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை எந்த காலத்திலாவது வெளியிட்டதை பார்த்துள்ளீர்களா. அங்கு ஒரு பேரம் நடக்கிறது. அதிகாரிகளை நெஞ்சில் கை வைத்து சொல்ல சொல்லுங்கள். எனக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதித்துள்ளீர்கள். அனைவரும் இதுதான் நடக்கிறது என்று என்னிடம் சொல்கிறார்கள். இதுதான் வருமான வரி சோதனையா.
நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை செய்தார்கள். இரண்டு நாள் சோதனை செய்துவிட்டு அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்துள்ளார் எனச் சொல்கிறார்கள். சோதனையின் போது அவர் காட்டிய ஆவணங்கள் அனைத்தும் உங்கள் அலுவலகத்திலும் இருக்குமே. பின் ஏன் சோதனைக்கு வந்தீர்கள். நாங்கள் சோதனை செய்தோம் எனக் கூறி சமூகத்தில் பொதுவெளியில் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தவே இத்தகைய செயல்கள். சரியாக உள்ளதா என தெரியாமல் ஏன் சோதனைக்கு வரவேண்டும். வீட்டில் வந்துதான் சரி பார்ப்பீர்களா. பின் ஏன் அலுவலகம் வைத்துள்ளீர்கள்” என்றார்.