The incident where ADMK councilors joined hands with DMK has caused a great stir in Karur ..!

Advertisment

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன், அதிமுக கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், 10 அதிமுக கவுன்சிலர்கள்லோகநாதன், ரவிச்சந்திரன், முருகன், கோமதி பிரபாகர், மகாலட்சுமி சின்னதுரை, நிர்மலா அழகர், தவமணி காளிதாஸ், சரோஜா சின்னசாமி, தனம் பாலகிருஷ்ணன், தாந்தோணி, ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி சரவணன்உள்ளிட்டோர் அதிமுகவில் கவுன்சிலராக இருந்துவந்தனர்.

The incident where ADMK councilors joined hands with DMK has caused a great stir in Karur ..!

இவர்கள் நேற்று (25.06.2021) தமிழ்நாடுமின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ, க.பரமத்தி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் நெடுங்கூர் கார்த்திக், கரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் நொய்யல் சேகர் ஆகியோரின் ஏற்பாட்டில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.

Advertisment

The incident where ADMK councilors joined hands with DMK has caused a great stir in Karur ..!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடப்பதற்கான ஆயத்தப் பணிகளைத் தமிழ்நாடு அரசு துவங்கியுள்ள நிலையில், தற்போது கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 13 அதிமுக கவுன்சிலர்களில் 11 பேர் திமுகவில் இணைந்ததால் கரூர் மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.