Incident of criticizing the ruling party by showing the sandal; Confusion in Andhra Pradesh

Advertisment

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கடந்த சில தினங்களாக நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக விமர்சனம் செய்தனர்.

இதனை அடுத்து தனது கட்சி தலைமை அலுவலகத்தில் தனது கட்சியினருடன் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பேக்கேஜ் அடிப்படையில் நான் கட்சி நடத்துவதை விமர்சிப்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று கூறி தனது காலணியை எடுத்து உயர்த்தினார்.

அரசியல் கட்சித்தலைவர் தனது கட்சிக்காரர்களுடன் பேசும்போது மாற்றுக் கட்சியினரை கடுமையான வார்த்தைகளால் கூறியது ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேலும் ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவிற்கு ஆதரவாக ரோஜா உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் கலந்துகொண்ட பேரணி முடிந்து விமான நிலையத்திற்கு திரும்பினர். அப்பொழுது ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விசாகபட்டினம் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக காத்திருந்த பவன் கல்யாண் கட்சியின் தொண்டர்கள்., ரோஜா உள்ளிட்ட மாநில கட்சியினர் விமான நிலையத்தில் நுழந்ததும் அவர்களின் கார்கள்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.