/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/06_28.jpg)
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. காலை 7 மணிக்கு ஆதினத்தால் சடங்குகள் செய்யப்பட்டு செங்கோல் மோடியிடம் ஒப்படைக்கப்படும். காலை 9 மணி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் சில உயர் அதிகாரிகள் காலை பூஜைகளில் கலந்து கொள்வார்கள்.
காலை 7.15 மணியளவில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். காலை 7.30 மணியளவில் காந்தி சிலை பந்தலில் பூஜை நடைபெறும். 9 மணியளவில் மக்களவை அறைகளில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
பகல் 12.07 மணியளவில் தேசிய கீதம் பாடும் நிகழ்வும் 12.10 மணியளவில் மாநிலங்களவை துணைத் தலைவர் உரை நடைபெற இருக்கிறது. தொடர்ந்து பகல் 12.17 மணியளவில் இரண்டு குறும்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. பகல் 12.38 மணியளவில் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றுகிறார்.
பகல் 1.05 மணியளவில் ரூ. 75 நினைவு நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பகல் 1.10 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணியளவில் விழா நிறைவு பெறுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)