/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IJK12422.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் வெளியானது.
இந்த நிலையில் இன்று (13/03/2021) இரவு சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஐனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது,'மாவீரன் மஞ்சள் படை' அமைப்பை நடத்திவரும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் காடுவெட்டி குருவின் மனைவி, சொர்ணலதா ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது..
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)