/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annamalai-in_3.jpg)
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது. இதில், பாஜக தனித்து போட்டியிட்டது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தமாக 12,838 கவுன்சிலர் இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பாஜக 5,480 இடங்களில் போட்டியிட்டது.
அதில், 21 மாநகராட்சியில், 22 கவுன்சிலர்கள் பதவியை அக்கட்சி வேன்றது. அதேபோல், சில நகராட்சி கவுன்சிலர்பதவிகளையும், பேரூராட்சி கவுன்சிலர்பதவிகளையும் பாஜக கைப்பறியது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகளுடன் கடந்த 28-ம் தேதி ஆலோசனை நடத்தினார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அப்போது அவர், ‘மாவட்டத் தலைவர்கள் கூடுதல் உழைப்பைக் காட்டியிருந்தால் இன்னும் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். பண பலத்தால்தான் தி.மு.க. ஜெயித்தது என்று சொல்கிறீர்கள். ஆனால், ஓட்டுக்குப் பணம் கொடுக்காமலே சென்னையில் உமா ஆனந்தன் ஜெயித்திருக்கிறார். காரணம், மக்களோடு அவர் நெருங்கி அரசியல் செய்ததுதான் காரணம்’ எனபேசியுள்ளார். மேலும், அந்தக் கூட்டத்தில், ‘30 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியவர்கள் அவர்களாகவே பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுங்கள், இல்லையெனில் நானே நீக்கிவிடுவேன்’ என்றும் மாவட்டத் தலைவர்களை எச்சரித்திருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)