Advertisment

''வருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க... இனி இவ்வாறு நிகழாது''-மன்னிப்புக்கேட்ட கே.என்.நேரு!

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பெயரைக் குறிப்பிட்டு ஒருமையில் பேசியது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மதுரை பேருந்துநிலையம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், ''விரைவில் தமிழக முதல்வர் திறந்துவைப்பார்'' எனத்தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், எம்.பி வெங்கடேசன் பெயரை ஒருமையில் குறிப்பிட்டு அங்கு போய் கேளுங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார். நாடாளுமன்ற உறுப்பினரை இப்படி அமைச்சர் ஒருமையில் பேசியது அங்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில், 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்,சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். மேலும் பொதுவெளியில் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப் பேசியதற்குக் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வந்தது.

இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த பதிவில் 'பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் பாலகிருஷ்ணனுக்கும் பாராளுமன்ற உறுப்பினரை ஒருமையில் குறிப்பிட்டது மன வருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

kn nehru Marxist Party su venkatesan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe