Advertisment

“கலைஞரின் கடிதத்தை ஆராய்ந்து 'டாக்டா்' பட்டம் பெற்ற வேட்பாளரை ஆதரியுங்கள்” –  கரு.பழனியப்பன் பேச்சு!

If we want to oust the BJP, we have to defeat the AIADMK

களத்தில் அனல் பறக்க,வேட்பாளா்கள் தங்களுடைய பிரச்சாரங்களை செய்து வரும் நிலையில், அவா்களை சற்று குளிர்விக்க சிறப்புப்பேச்சாளா்களை அழைத்துப் பேச வைப்பார்கள். அதேபோன்று இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் இனிகோ இருதயராஜை ஆதரித்து சுப்பிரமணியபுரம் பகுதியில், கரு.பழனியப்பன் வாக்கு சேகரித்தார்.

Advertisment

அப்போது அவா் பேசுகையில், “வேட்பாளா் இனிகோ இருதயராஜ் திமுக தலைவர் கலைஞரின் கடிதம் குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டா் பட்டம் பெற்றவா். கலைஞரை முழுமையாகத் தெரிந்தவா்,சட்டமன்றத்திற்குள் செல்வது மிக அவசியமானது.பாஜக ஒருபோதும் மக்கள் பிரச்சனைக்காக தெருவில் இறங்கிப் போராடியது இல்லை. ஏனென்றால் அவா்கள் மதம் மற்றும் சாதியை வைத்து மட்டுமே அரசியல் செய்கிறவா்கள். அவா்களோடு சோ்ந்து இந்த தோ்தலை சந்திக்கும் அதிமுகவை தோற்கடிப்பது தான் நம்முடைய முதல் கடமை. அவர்களை விரட்ட அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். எனவே, திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டியதில்மட்டும் கவனம் செலுத்துங்கள். இது ஒருவருடைய வெற்றி அல்ல ஒரு தலைவனின் வெற்றி” என்று பேசினார்.

Advertisment

trichy tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe