Advertisment

அந்த 3 எம்எல்ஏக்களுக்கும் துணிச்சல் இருந்தால் அமமுகவில் இருக்கிறோம் என்று சொல்லட்டும்! - ஓபிஎஸ்

சமீபத்தில் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வாரணாசியில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.பின்பு வாரணாசியில் அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாடு அரசியல் சம்மந்தமாக சில தகவல்களை சொன்னதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பேட்டியளித்தார். அப்போது ‘பாஜவிற்கு நீங்கள் போகப்போவதாக கூறப்படுகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டனர். இந்தக் கேள்வியால் டென்சனான ஓ.பன்னீர்செல்வம், ‘அது முட்டாள்தனமான கேள்வி’ என்று கோபத்துடன் பதிலளித்தார்.மீண்டும் அதே கேள்வியை நிருபர் கேட்க அதற்கு, ‘‘ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன்.

Advertisment

ops

திரும்பக் கேட்கிறீர்களே? யார் தூண்டி விட்டு கேட்கிறீர்கள்?’’ என்று ஓபிஎஸ் மீண்டும் டென்ஷனாகி விட அருகில் இருந்த அதிமுக பிரமுகர்கள் எப்படி இப்படி கேள்வி கேட்கிறீங்க, கட்சியின் ஒருங்கிணைப்பாளர். தலைமையே அவர்தான்... அவர் வேறு இடத்திற்கு மாறுவாரா? எப்படி கேக்கலாம்? எந்த கேள்வியும் கேளுங்க... இந்த கேள்விய கேட்கலாமா? சிண்டு முடிக்கிறீங்க... கீழ்தரமான கேள்வி கேட்டு தரத்தைக் குறைச்சுக்காதீங்க..’’ என்று கேட்க சிறிது நேரம் அங்கு பரபரப்பாகியது. பின்பு ஓபிஎஸ் கூறும் போது மதுரையில் மட்டும் தன இந்த மாதிரியான கேள்வி கேட்கிறீங்க வேறு எங்கயும் இப்படி கேள்வி கேட்பதில்லை என்று கூறினார்.அதனை தொடர்ந்து நான் பாஜவில் சேரப்போகிறேன் என்பது அடிமுட்டாள்தனமான கருத்து.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஒரு இயக்கத்தில் வெற்றி பெற்று வேறு இயக்கத்தில் பதவி பெற்றால் அந்த பதவியில் அவர் நீடிக்க முடியாது.அந்த 3 எம்எல்ஏக்களும் அமமுகவில் இருப்பதற்கான உறுதியான ஆவணங்கள் சபாநாயகரிடம் உள்ளது. அந்த மூவருக்கும் துணிச்சல் இருந்தால், நாங்கள் அமமுகவில் இருக்கிறோம். நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள் என கூறினால் அது அவர்களின் வீரத்திற்கு அழகு என்று கூறினார் . பாஜகவில் ஓபிஎஸ் இணையப்போவதாக சமீப காலமாக இப்படியான செய்தி அதிகம் பரவிக்கொண்டிருக்கிறது இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment
admk ammk madurai modi ops_eps
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe