Advertisment

“பதவி இல்லை என்று போனால் மாநில அளவில் பொறுப்பு தருவார்கள்” - அமைச்சர் கே.என். நேரு 

Advertisment

திமுகவின் முதன்மைச் செயலாளரும், தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமானகே.என்.நேரு இன்று தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கவர்னர் எதிர்க்கட்சியைப் போல் செயல்படுகிறார். சிறிய விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்குகிறார். அதிமுக இன்று பிளவுபட்டு இருக்கிறது. அவர்களை ஒன்று சேர விடாமல் செய்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு பாஜக வர முயலுகிறது.

அப்படித்தான் இன்றைய நிலை இருக்கிறது. தமிழகத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க பாஜக தொடர்ந்து முயன்று கொண்டு இருக்கிறது. எந்தக் கட்சியிலும்பதவி இல்லையேஎன்று அவர்களிடம் போனால் மாநில அளவில் பதவி தருகிறார்கள். அதிமுகவை வேண்டுமென்றே பாஜக பிரித்து வைத்துள்ளது. இருவரும் பிரிந்து இருக்கும்போது தேவையான இடங்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் செயல் படுகிறார்கள்” எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe