Advertisment

'இதே நிலை நீடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு'-அன்புமணி ராமதாஸ் ட்வீட்

'If this situation continues, there is a possibility of an accident' - Anbumani Ramadoss tweeted

சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகளைமேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்பதிவில், 'சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு போல காட்சியளிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் மழை நீர் வடிய தாமதம் ஆகிறது!மழைநீர் வடிகால் பணிகளில் 95% முடிந்து விட்டதாக மேயரும், 70% நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும் கூட, பெரும்பான்மையான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. தண்ணீர் வடியாததற்கு அது தான் முக்கிய காரணம்.

Advertisment

இன்னும் பல இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கானஅடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவர்களும், மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது.இதே நிலை நீடித்தால் மழை நீர் தேங்குவது ஒரு புறமிருக்க, விபத்துகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தவிர்க்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளையும், அமைக்கப்பட்ட இடங்களில் இணைப்பு பணிகளையும் சென்னை மாநகராட்சி விரைந்து அமைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Chennai weather rain pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe