வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு திமுக தனது பணிகளை தொடங்கிவிட்டது. இதேபோல் அதிமுக கூட்டணி வேட்பாளர் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அ.தி.மு.க சார்பில் வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். திமுக சார்பாக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

dmk

Advertisment

Advertisment

இதனையடுத்து, ஆம்பூரில் திமுக தேர்தல் அலுவலகத்தை, திமுக பொருளாளர் துரைமுருகன்​ திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டத்தில், அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி​யில் பேசிய துரைமுருகன், தனது மகனின் வேட்புமனுவை நிராகரிக்க செய்ய சிலர் சதி செய்து வருவதாக துரைமுருகன் பேசினார்.