நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. அதே போல் இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் வென்றது. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக போட்டியிட்டார்.அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். மேலும் அமமுக சார்பாக இன்று திமுகவில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.

Advertisment

ops

மும்முனை போட்டி நிலவிய தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தேனி தொகுதி சார்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது வாக்குகளை பெற மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் திட்டமிட்டு செய்து உள்ளனர். தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்குகான ஆதாரங்கள் உள்ளது.எனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்படப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் பணப்பட்டுவாடா உறுதி செய்யப்பட்டால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தனது பதவியை இழக்க நேரிடும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment