
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்த போது செய்தியாளர்கள் 'செந்தில் பாலாஜிக்கு நடைபெறும் அறுவை சிகிச்சை பொய்யானது; அமலாக்கத்துறை தான் வெளிப்படுத்த வேண்டும் என பிரேமலதா சொல்லி இருக்கிறாரே' அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்றுகேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ''அவர் சொல்வது தவறு கிடையாது. நாட்டு மக்கள் ஆப்ரேஷன் உண்மையிலேயே நடந்ததா என்கின்ற விவரத்தை அவர்கள் மட்டுமல்ல, எல்லாருமே எதிர்பார்க்கிறார்கள். அதனால் தெளிவுபடுத்த வேண்டியது மருத்துவத்துறையின் கடமை. அவர் நல்லா இருந்தால்தான் வாயை திறக்க முடியும். அவர் வாயை திறந்தால் தான் நிறைய பேர் உள்ளே போக முடியும். அதனால் அவர் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக பேச வேண்டும். நாட்டு மக்களை பொறுத்தவரை தேமுதிக பொருளாளர் கேட்டது கரெக்ட்தான்.
இதயத்தில் அடைப்பு இருந்ததா? ஆஞ்சியோகிராம் பண்ணாங்களா? பைபாஸ் சர்ஜரி செய்தார்களா? என்ன விவரம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இது அரசின் கடமை. அமைச்சராக இருக்கும் பொழுது பெட்ரோல் அலவன்ஸ், சம்பளம், அதேபோல் பங்களா எனஎல்லா வசதியும் கொடுக்கிறார்கள். எதற்காக கொடுக்கிறார்கள் இலாகாவை கவனிப்பதற்காக கொடுப்பார்கள். ஆனால் இலக்கா இல்லாதவருக்கு எதற்கு சம்பளம். எதற்காக மக்கள் வரிப்பணத்தை தூக்கி கொடுக்க வேண்டும். அது தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)