Advertisment

''எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும்''-ஆறுமுகசாமி ஆணையத்திடம் புகழேந்தி மனு!

 '' If Edappadi Palanisamy is investigated, many facts will come out '' - V. Pukhalendi petition to Arumugasami Commission!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளதைத் தொடர்ந்து ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் கே.பழனிசாமியும் விசாரிக்கப்பட வேண்டும்.

Advertisment

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பொழுது பழனிசாமி உடன் நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன். நடந்தவைகள் அனைத்தும் பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அப்பல்லோநிர்வாகம் எதை மறைக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். ஆகவே மக்களின் பெயரால் பன்னீர்செல்வமும், கே.பழனிசாமியும் இணைப்பை ஏற்படுத்திய இரட்டை இலையை மீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது பன்னீர்செல்வம் வாக்குமூலம் மூலம் தெளிவாகிறது. எனவே எடப்பாடி கே.பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் இதில் பல உண்மைகள் வெளிவரும் என்று நம்புவதாகப் புகழேந்தி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

Advertisment

PUGALENTHI jayalalitha admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe