Advertisment

காங்கிரஸ் தோல்வி அடைந்தால் திமுக தான் காரணம்...கராத்தே தியாகராஜன் அதிரடி பேச்சு!

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணமாக இருக்கும். அதே போல் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சிவாஜிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் சென்னையில் பேட்டியின் போது கூறியுள்ளார்.

Advertisment

congress

ஏற்கனவே தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான், ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார், 2021-ல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆவார் என்று கூறினார். தற்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

byelection congress Karate R. Thiagarajan Speech
இதையும் படியுங்கள்
Subscribe