Advertisment

''முதல்வர் இதில் பிடிவாதமாக இருந்தால் அது தவறான முடிவாக வரும்''-டி.டி.வி.தினகரன் பேட்டி  

NN

இன்று அமமுகவின் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இந்த ஆட்சி 60 மாதங்களில் அதாவது ஐந்து வருடங்களில் பெறஇருக்கிற கெட்ட பெயரை இப்பொழுதே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். திமுக நிறைய நிதி வைத்திருக்கிறார்கள். நீங்களே பார்த்திருப்பீர்கள் 2021தேர்தலின்பொழுது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எல்லாம் 15 கோடியோ, பத்து கோடியோ நிதி உதவி செய்தவர்கள் அவர்கள்.

Advertisment

81 கோடி என்பது திமுகவினுடைய கட்சிக்கு ஒரு பெரிய விஷயம் அல்ல. சொந்த நிதியில் கடலில் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அதைதான் மக்கள் எதிர்க்கிறார்கள். மீனவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதித்துவிடும், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும், கடல்வளம் பாதிக்கும் என்று சொல்லி பெருவாரியான மக்கள் எதிர்ப்பதற்கு காரணமே கடலில் பேனா வைப்பதற்கு தான். திமுக தனது சொந்த நிதியில் கலைஞரின் நினைவிடத்திலேயே அல்லது வேறு எங்கேயோ வைத்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அதை விட்டுவிட்டு இப்படி பிடிவாதமாக முதல்வர் இருந்தார் என்றால் அது ஒரு தவறான முடிவாக வரும் காலத்தில் அமையும்'' என்றார்.

Advertisment

ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe