ஆளும் தி.மு.க. அரசை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க வில் சரியான ஒற்றைத் தலைமை இல்லை என்று கூறி இதுவரை இருந்து வந்த ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பதவியைப் பறித்து ஒற்றைத் தலைமையை உருவாக்க முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியும், ஓ.பி.எஸ் சார்பிலும் அணி திரட்டி வந்த நிலையில் தொடக்கத்திலிருந்த ஆதரவும்,தன்னைவிட்டுப்போகிறது என்ற நிலையில்பொதுக்குழுகூட்டம் நடத்ததடைகேட்டுநீதிமன்றம் வரை போனார் ஓ.பி.எஸ்.
அதையும் கடந்து பரபரப்பான நிலையில் பொதுக்குழு நடந்து எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மேலும் அதில்தண்ணீர் பாட்டில் வீச்சு வரை களேபரங்கள் நடந்தது. இந்த நிலையில், தான் தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ளசேதுபாவாசத்திரம்வடக்கு ஒன்றிய செயலாளர்மதிவாணன்வெளியிட்டுள்ளபோஸ்டர்மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தபோஸ்டரில்23/06/2022- ல் நடந்த பொதுக்குழுவில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் எனது அரசியல் ஆசான்வைத்திலிங்கம்எம்.எல்.ஏ. ஆகியோரை அவமதிப்பு செய்த எடப்பாடி அணியினரைக் கண்டித்து அவர்களுக்கு நான் அளித்துவந்தஆதரவைத்திரும்பப் பெறுகிறேன் என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்தபோஸ்டரைப்பார்த்த பலரும் மீண்டும் ஓ.பி.எஸ். கை ஓங்குகிறதோ என்கின்றனர்.