Advertisment

மயிலாடுதுறையை தனிமாவட்டமாக்க போராடுவேன் - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் முகமது ரிஃபாயுதின், மயிலாடுதுறையில் உள்ள உதவி ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கண்மனியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisment

I will try change Mayiladuthurai district said by MNM candidate

மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களோடு அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார், "மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான மய்யமாக இருக்கிறது. மக்களின் நலனே எங்கள் கட்சியின் நலன் என்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். அவரது கொள்கையின்படி நாங்கள் செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம்.

மயிலாடுதுறையின் பிரதான கோரிக்கையான மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக மாற்றுவதற்கு முழு முயற்சியில் ஈடுபடுவேன். அதேபோல் டெல்டா மாவட்டத்தில் மயிலாடுதுறை தொகுதியில் பிரதான பிரச்சனையான மீத்தேன், ஹைட்ரோ கார்பன், மணல் கொள்ளை, காவிரி பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தின் மூலம் குரல் கொடுப்பேன். மக்களுக்காக என்றென்றும் உழைப்பேன். அப்படி சொன்னதை செய்யவில்லை என்றாலும், மக்களுக்காக உழைக்கவில்லை என்றாலும் மக்கள் வெளியேற்றுவதற்கு முன்பே நாங்கள் வெளியேறுவோம்" என்றார்.

Mayiladuthurai MNM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe