Advertisment

'குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால்...' - கமல் அதிரடி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டார். விழாவில் அரசியல் தொடர்பாக அதிகம் பேசினார். குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால், நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன். இளைஞர்களே என்னுடைய குடும்பம். அவர்களே நாளைய தலைவர்கள். மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். அதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது. மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

Advertisment

மேலும் பேசிய அவர், " கேள்விகள் மூலமே எனக்கு கல்வி கிடைத்துவருகிறது. படிப்பை பாதியில் நிறுத்தியதால், இனி நான் சாகும்வரையில் மாணவன் தான். அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது. இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும்" என்றும்அவர் குறிப்பிட்டார்.

kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe