Advertisment

“தலைமை அலுவலகத்திற்கு நிச்சயம் போவேன்”- சசிகலா

publive-image

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நிச்சயம் போவேன் என திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா கூறியுள்ளார்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தில் சசிகலா செய்தியாளர்களைச்சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “ஈபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தனித் தனியாக டெல்லி பயணம் மேற்கொண்டனர் என்ற கேள்விக்கு பதில் மக்கள் பிரச்சனையை பற்றி நீங்கள் கேள்வி கேட்கலாம். இது உட்கட்சிப் பிரச்சனை. இதற்கு நீங்கள் இவ்வளவு வெயிட் கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன். தலைமை கழகத்திற்கு நிச்சயம் போவேன். தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகமாகிவிட்டது. தமிழக அரசு அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தில் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஆ.ராசா இந்து மதத்தை பற்றி பேசுகிறார்” எனக் கூறியுள்ளார்.

admk sasikala Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe