/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_210.jpg)
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில், அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ 'நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு' என்று போராடியவர் நம்மாழ்வார். எங்களைப் போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினியின் அரசியல் முடிவுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இதனை எனது ட்விட்டர் பக்கத்திலும்கூட பதிவு செய்து உள்ளேன். அவரும், அவரது குடும்பத்தினரும் எண்ணுவதுபோல் அவரது உடல்நலம் மிகவும் முக்கியமானது. முன்னதாக அரசியல் பயணத்தில் கடும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளேன். அது அவரையும், குடும்பத்தினரையும், ரசிகர்களையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். இளம் வயதிலேயே அமைதி, நிம்மதியைத் தேடிச் சென்றவர். இப்போது அவருக்கு கூடுதலாக நிம்மதியும் அமைதியும் தேவைப்படும். அதனால்தான் அவருக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.
வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் அதே தொகுதியில் போட்டியிடுவேன் இது உறுதி. இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வும் இடையே போட்டி இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும்தான் போட்டி” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)