Advertisment

''நானும் எதிர்ப்பு தெரிவிச்சேன்; மக்களோடுதான் இருப்பேன்'' - செல்வப்பெருந்தகை பேட்டி

 I will be with the people'-Selvaperunthakai interview

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில்புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டக்குழுவினர் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பரந்தூர் மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

Advertisment

மீண்டும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Advertisment

 I will be with the people'-Selvaperunthakai interview

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகையும் கலந்துகொண்டார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, ''பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்கள் அந்தப் பகுதியில் இருக்கிறது. கம்பி கால்வாய் என்கின்ற மிகப்பெரிய கால்வாய் இருக்கிறது. காவேரிப்பட்டினத்தில் கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் கால்வாய் இருக்கிறது. அது நீர்ப்பிடிப்பு பகுதி. இதை எல்லாம் ஆய்வு செய்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். போராட்டக்காரர்கள், அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் ஜனநாயக முறையில் நியாயமான போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வாயிலாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜனநாயக முறையில் 147 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசும், தமிழக முதல்வரும் கனிவுடன் இதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என நாங்கள் அறிவோம். இருந்த போதிலும் இந்த ஆய்வு அறிக்கை வந்த பிறகு அந்த வீடுகளை அகற்றாமல், மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் விமான நிலையம் அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

மூன்று நான்கு இடங்களை அதிமுக ஆட்சியில் விமான நிலையத்திற்காக ஐடென்டிஃபை பண்ணினார்கள். எதிலுமே அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. பரந்தூர் விமான நிலையம் என்று மாநிலங்களவையில் அறிவித்தது மத்திய ஒன்றிய அரசினுடைய அமைச்சர். மேற்கொண்டு அந்தப் பணிகளைத்தொடரும்பொழுது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நானும் எதிர்ப்பு தெரிவிச்சேன். என்னுடைய தொகுதி மக்கள்தான் முக்கியம். மக்களுக்குப் பிரச்சனை வராமல் பார்க்க வேண்டும். காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக இங்கே இருக்கிறார்கள். இப்பொழுது ஆய்வுக்கு உட்படுத்த இருக்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டியின் வாட்டர் மேனேஜ்மென்ட் துறையும் ஐஐடி சேர்ந்து ஆய்வு செய்யப் போகிறார்கள். என்ன ரிப்போர்ட் வருகிறது என்று பார்ப்போம். நான் மக்களோடுதான் இருப்பேன்'' என்றார்.

paranthur Selvaperunthagai MLA congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe