“அண்ணாமலையின் ஊழல் பட்டியலை வரவேற்கிறேன்” - ஆ.ராசா எம்.பி.

publive-image

அண்ணாமலையின் திமுக ஊழல் பட்டியலை வரவேற்கிறேன்.ஆனால், அதில் அவர் ஜெயிக்க வேண்டும் என நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணைவெளியிட்டது. இதனையடுத்து கோவையில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சில தினங்களுக்கு முன் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைத்தாமாக முன்வந்து யாராவது கொடுத்தால் மட்டுமே நிலங்களைக் கையகப்படுத்துவது என்றும்,எக்காரணத்தைக் கொண்டும் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்களை தமிழக அரசு எடுப்பதில்லை என்பதிலும்தமிழக அரசு திட்டவட்டமாக உள்ளது.

அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் எனச் சொல்லியுள்ளார். உள்ளபடியே அதை வரவேற்கிறேன். ஆனால், அதை நிரூபித்துஜெயிக்க வேண்டும். பட்டியல் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். என் மேலும் தான் சொன்னார்கள். ஊழல் பட்டியல் சொல்வது என்பது வேறு, நிரூபிப்பது வேறு” எனக் கூறினார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe