Advertisment

“என் பணிகளைச் செய்ய அனுமதி வேண்டும்” - சேகர்பாபுவிடம் கோரிக்கை வைத்த உதயநிதி

publive-image

Advertisment

சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழாவில் பேசிய அவர், “எத்தனையோ தொகுதிகளுக்கும் மாவட்டங்களுக்கும் சென்றிருந்தாலும் அதிகமானநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுசென்னை கிழக்கு மாவட்டம்தான். அதற்கு அமைச்சர் சேகர்பாபு மட்டும்தான் காரணம்.

நான் அமைச்சர் சேகர்பாபுவிடம் கூறியுள்ளேன். நான் என் தொகுதிக்குச்செல்வதை விட என் மாவட்டத்திற்குச் செல்வதை விட சென்னை கிழக்கு மாவட்டத்திற்குத்தான் அதிகளவில் வந்து செல்கிறேன். அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒரு வேண்டுகோள்வைக்கிறேன். நான் மற்ற மாவட்டங்களுக்கும் சென்று என் பணிகளைச் செய்ய அனுமதி வழங்குங்கள்.

Advertisment

என் தொகுதியில் எம்.எல்.ஏ வாக பொறுப்பேற்ற பின் நான் முக்கியத்துவம் கொடுப்பது கல்வி உதவித்தொகை தான். பல கட்டங்களாக என் தொகுதியில் 1 கோடியே 20 லட்சம் வெறும் கல்வி உதவித்தொகையாக மட்டும் கொடுத்துள்ளோம். ஆனால் சேகர்பாபு இந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டும் 1 கோடி மதிப்பிலான உதவித் தொகைகளை வழங்கியுள்ளார்” எனக் கூறினார்.

sekarbabu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe