Advertisment

'திட்டமிட்டு இந்த சதிச்செயல் நடைபெறுவதாக பார்க்கிறேன்'-சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

EPS

Advertisment

'முன்னர் பல ஆண்டுகள் அதிமுக, திமுக ஆட்சியிலிருந்த பொழுதும் யாரும் ஆதீனத்தில்தலையிடவில்லை. ஆனால் இன்று ஆட்சியாளர்களால் திட்டமிட்டு ஒருசதிச்செயல் நடைபெறுவதாக நான் பார்க்கிறேன்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றஓராண்டுக்காலத்திலேயே நான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பதைப்போலச்சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.ஆன்லைன்ரம்மிசூதாட்டம்இன்றைக்குச்சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தஆன்லைன்ரம்மிசூதாட்டத்தில் கலந்துகொண்டு பலபேர் தங்களது சொத்துக்களை இழந்து,விலை மதிக்கமுடியாத உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத்தில்கூட இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள். இது ஒரு துயரமான சம்பவம். நாங்கள் பலமுறை இந்தஅரசுக்குகோரிக்கை வைத்திருக்கின்றோம். சட்டமன்றத்திலும் தெரிவிக்கின்றோம். உடனடியாகஆன்லைன்ரம்மிதமிழகத்தில் தடைசெய்வதற்குத்தேவையான சட்டத்தை அவசரச்சட்டமாகக்கொண்டு வரவேண்டும் என அரசினுடையகவனத்திற்குக்கொண்டு வந்திருக்கிறோம். தமிழகத்தில் தொடர்ந்துபோதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதையும் இந்த அரசு கட்டுப்படுத்த முடியவில்லை. அதையும் கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் 'அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?' என்று கேள்வி எழுப்ப,அதற்குப்பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''நீங்களும் கற்பனையாக ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்வது. ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த கேள்வியை யார்சொல்லிக்கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை'' என்றார்.

Advertisment

மேலும் பேசிய அவர், ''நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 3% தான். இதிலிருந்து உங்களுக்குநன்றாகத்தெரியும் அதிக வாக்குகளைப் பெற்ற, அதிக சட்டமன்றஉறுப்பினர்களைப்பெற்ற கட்சி அதிமுக. எனவே நாங்கள் தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்கின்ற கட்சி திமுக என எல்லோருக்கும் தெரியும் அதை இப்போது ஆளுகின்ற திமுக நிரூபணம் செய்துகொண்டிருக்கிறது. கருவூரில் நெடுஞ்சாலைத்துறையில் சாலையை அமைக்காமல்சாலைபோட்டதாகப்பணத்தைப்பெற்று இருக்கிறார்கள். இதை அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு அதிமுக எடுத்துச் சென்றவுடன் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நிறைய துறைகளில் இப்படி நடந்து கொண்டிருக்கிறது.

காலங்காலமாக அதிமுகவும் ஆட்சியிலிருந்தது, திமுக ஆட்சியிலிருந்தது ஆனால் அப்பொழுது ஆதீனத்தில் யாரும் தலையிடவில்லை. இன்று ஆட்சியாளர்களால் திட்டமிட்டு ஒருசதிச்செயல் நடைபெறுவதாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் திமுக ஆட்சியிலிருந்திருக்கிறார்கள் பல ஆண்டுகளாகஅதிமுவும் ஆட்சியில் இருந்துள்ளது. அப்பொழுதெல்லாம்ஆதீனத்திற்குள் எந்தவித எல்லை மீறிய சம்பவங்களும் நடைபெறவில்லை. எந்த மதமாக இருந்தாலும் சரி, எந்த திருக்கோவில்களாகஇருந்தாலும் சரி அந்த ஐதீகத்தின்படிநடக்கபடவேண்டும். அதுதான் முறை. அதுதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசாங்கம் உருவான பிறகு ஏதேதோ தவறான வழியிலேயே யாருடைய பேச்சைக்கேட்டுசெய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது தவறான போக்குஎன்பதைதெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe