ADVERTISEMENT

“இனியும் பிஜேபியை அதிமுக தோளில் தூக்கிச் சுமக்க மாட்டார்கள் என நம்புகிறேன்” - தொல்.திருமாவளவன்

05:48 PM Feb 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் தற்கொலை செய்து கொண்ட லாவண்யாவின் நினைவு ஒளியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற ஊராட்சித் தேர்தல் அனைத்திலும் திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 55 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். திருச்சியில் ஒரு இடமும் சென்னையில் 4 இடமும் மதுரையில் ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளோம். பல பொது இடங்களில் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர் ஆகிய இடங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் அளிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு.

நாங்கள் நல்லிணக்கத்தோடு பேசி இடங்களைப் பெற்று தேர்தலை சந்தித்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். திருச்சியில் துணை மேயரும், கடலூரில் மேயரும், 9 மாநகராட்சிகளில் துணை மேயர் கேட்பது எங்களது கடமை விருப்பம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், ‘திமுக பெற்ற வெற்றி செயற்கையான வெற்றி என்ன ஓ. பன்னீர்செல்வம் கூறி உள்ளார்’ என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர், “தங்களது தோல்வியை இப்படித்தான் நியாயப்படுத்த முடியும். எனவே ஓ.பி.எஸ். இப்படிக் கூறியுள்ளார். அதிமுக விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது என பிஜேபியினர் பெருமை அடிக்கிறார்கள். இது அதிமுகவை சிறுமைப்படுத்துகிற செயல். இப்போதாவது அதிமுக புரிந்து கொள்ளவேண்டும். இனியும் பிஜேபியை அதிமுக தோளில் தூக்கிச் சுமக்க மாட்டார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT