Advertisment

“எனக்கு எந்த வெறியும் இல்லை” - ஆளுநர் தமிழிசை

publive-image

Advertisment

“அதிகார வெறி என சொல்கிறார்கள். எந்த வெறியும் எனக்கு இல்லை. அனைவரிடமும் பரிவாக இருந்து மகிழ்ச்சியாக சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன்” என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் எந்த கோப்புகளையும் தாமதப்படுத்துவது இல்லை. போன ஆண்டு மட்டும் ஏறத்தாழ 1000 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளேன். 17 கோப்புகளில் மட்டும் தான் சில தகவல்கள் தேவை என்றுஅனுப்பியுள்ளேன். முதலமைச்சர் மக்கள் நலன் சார்ந்த கோப்புகளை அனுப்பினால் நான் எந்த தடையும் சொல்வதில்லை. நானே தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை. அமைச்சரவையின் முடிவு இல்லாமல் தன்னிச்சையாக ஆளுநர் முடிவெடுக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒரு கோப்பிலும் நான் அப்படி முடிவெடுத்தது இல்லை. அது எனது எண்ணமும் இல்லை.

அதேபோல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை பார்த்து இங்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சொல்கிறார்கள். அதிகாரம் என்ற வார்த்தையை நான் என்றும் பயன்படுத்தியது இல்லை. ஆளுநருக்கு என்ன பொறுப்பு உள்ளதோ அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து என்ன பொறுப்பு இருந்ததோ அதில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் உள்ள நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. அதிகார வெறி என சொல்கிறார்கள். எந்த வெறியும் எனக்கு இல்லை. அனைவரிடமும் பரிவாக இருந்து மகிழ்ச்சியாக சேவை செய்ய வேண்டும் என்று தான் நினைக்கின்றேன்” எனக் கூறினார்.

Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe