I have made relief available directly to the people

Advertisment

நேற்று (26.03.2021) காலை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராயபுரம் மன்னார்சாமி கோவில் அருகே பிரச்சாரத்தை துவங்கிய அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து வெங்கடாசலம் தெரு, டி.வி. கோயில் தெரு, ஆண்டியப்பன் தெரு, மேற்கு மாதா கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு, வண்ணார் தெரு குடிசை பகுதி மற்றும் வெங்கடேசன் தெரு அகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

மக்கள் மத்தியில் அமைச்சர் பேசுகையில், “ராயபுரம் தொகுதி மக்களுக்குப் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். அரசு நிவாரணம் நேரடியாக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளேன். புயல் வந்தபோதும், கரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும் மக்களுக்கு நிவாரணஉதவி வழங்கியுள்ளேன். ராயபுரம் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன், மீண்டும் பாடுபடுவேன். உங்களில் ஒருவனாகவும், உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும் இருப்பேன். உங்கள் பிரச்சனையை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம். அதை உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்க தயாரக இருக்கிறேன்” என்றார். பிரச்சாரத்தின்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.