Advertisment

“குருவை பார்த்துவிட்டு போகலாம் என வந்துள்ளேன்” - அமைச்சர் ரோஜா

publive-image

நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின் செய்தியாளர்களைச்சந்தித்த அவர், “திருச்செந்தூர் முருகரை பிரதோச நேரத்தில் பார்த்தது மிக சந்தோசம். ரொம்ப வருடத்திற்கு பின் இங்கு வந்துள்ளேன். என் பெண் குழந்தை பிறந்த பின் நான், செல்வா, குழந்தை மூவரும் சேர்ந்து வந்தோம். இப்போது குரு மாறியுள்ளது. எனக்கும், செல்வாவிற்கும் என அனைவருக்கும் நன்றாக உள்ளது. அதனால் குருவை பார்த்துவிட்டு போகலாம் என வந்துள்ளேன்.

Advertisment

ஆந்திர மாநிலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மிக நன்றாக உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தான். வளர்ச்சி மற்றும் நலத்திட்டம் இரண்டையும் இரண்டு கண் போல் பார்த்து வருகிறார். அதனால் தான் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் இடைத் தேர்தல்கள் வந்தாலும் அனைத்து வாக்காளர்களும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்கபலமாக உள்ளார்கள். 2024 தேர்தலில் 175 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெற போகிறோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய விவகாரத்தில் நீங்கள் பேசியது குறித்து அவரது ரசிகர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்கிறார்களே? எனக் கேட்டனர். இதற்கு அவர், கோவில்களில் குலவையிடுவதுபோல்செய்து காட்டிவிட்டுச் சென்றார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe