Advertisment

'நான் எப்போதுமே அதிமுக மட்டும் தான்; பாஜக தலைமையில் கூட்டணி - ஓ.பி.எஸ் பேச்சு

 'I have always been only AIADMK' - OPS speech

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஓ.பி.எஸ் அணியின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய அவர், 'தமிழக மக்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார், ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது, இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கொடநாடு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லையென்றால் தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

Advertisment

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடன் பல கட்சிகள் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் சிலர் நான் தனி கட்சி தொடங்குவார் என சொல்லி வருகிறார்கள். எப்போதுமே அதிமுக மட்டும் தான் வாழ்நாள் முழுவதும் அதிமுக தொண்டனாக கட்சிக்கு உழைப்பேன் அதற்கான போராட்டத்தில் வெற்றி பெறுவோம்'' என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், 'அதிமுக தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் தொண்டர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தர்மயுத்தம், நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும், பொறுப்பாளர்களும் தார்மீக ஆதரவு அளித்துக்கொண்டு வருகிறார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்ற முடிவுக்கு தான் இந்த தேர்தல், ஏற்கனவே பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக இந்திய திருநாட்டின் பிரதமராக வரவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் போராட்டத்தை நடத்தி வருகிறோம். உறுதியாக பாரதிய ஜனதா கட்சி் தலைமையில் அமைக்கின்ற கூட்டணியில் உறுதியாக வெற்றி பெறுவோம்' என தெரிவித்தார்.

admk modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe