Advertisment

"ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவது மகிழ்ச்சி!" - ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன்!

i had solution for trichy issue

நேற்று (10.03.2021) அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், பல முக்கியப் புள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது, ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராகமுன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்தகு.ப.கிருஷ்ணன்,"108 வைணவத் தலங்களில் முக்கியம் வாய்ந்த தலமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கத்திற்கான அங்கீகாரத்தைக் கொடுக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. எனவே, நான் வெற்றி பெற்றவுடன் முதலில் செய்ய வேண்டிய காரியம், இந்த ஸ்ரீரங்கத்திற்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பது தான். அதேபோன்று ஸ்ரீரங்கத்தில் மிக முக்கியமாகப் பேசப்பட்டு வரும் அடிமனை பிரச்சனையை சரி செய்வதற்கு, என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது என்றும் கூறினார்.

Advertisment

ஆனால்,ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று கோவில் சொத்து என்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது. எனவே, ‘இது குறித்து நீதிமன்றத்தின் உதவியோடு ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறேன்’. அந்தத் திட்டத்தின் மூலம், இந்த அடிமனை பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறினார். வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கையான நறுமணத் திரவம் தயாரிக்கக்கூடிய நிறுவனத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைத்துத் தருவதாகக் கூறி இருந்தார். அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

கள்ளிக்குடி மார்க்கெட் தொடர்பான பிரச்சனையில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்றம் என்ன வழி காட்டுகிறதோ, அதனடிப்படையில் மார்க்கெட் செயல்படும் என்று தெரிவித்தார். இந்தத் தொகுதியில் ஏற்கனவே அமைச்சர் வளர்மதி வெற்றிபெற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவது எனக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறதுஎன்று கூறினார். மேலும், இதற்கு நான் என்னுடைய தலைமைக்கு நன்றி கூறுகிறேன்"இவ்வாறு தெரிவித்தார்.

constituency trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe