Advertisment

''இப்போதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை''-எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி   

Advertisment

இன்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், ''மாவட்ட அதிமுக அவை தலைவர், மாவட்ட துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருவிகவை என்னுடைய காரிலிருந்து கடத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்தது. அதன் பிறகு அவரைத் தவிர ஐந்து பேர் போட்டியிடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றபோது காரை உள்ளே விடாமல் தடுத்து விட்டார்கள். அதற்கு முன்னாடி திமுக மேயரும், துணை மேயரும் திமுக கவுன்சிலர்களை கூட்டிக்கொண்டு இரண்டு கார் முன்னாடி போகுது. ஆனால் அதிமுகவினுடைய கேண்டிடேட்டை உள்ளேயே விடவில்லை. இதனை போலீசார் வேடிக்கை பார்த்தனர்.

அதன் பிறகு அவர்களை எல்லாம் பின் வழியாக கொண்டு போய் தான் தேர்தல் நடந்தது. ஆனால் அராஜகம் செய்த திமுக மீது எஃப்.ஐ.ஆர் போடவில்லை. நாங்களும் பெட்டிஷன் கொடுத்து விட்டோம். அராஜகம் செய்து, அடித்த திமுக மீது எஃப்.ஐ.ஆர் போடவில்லை. இந்த அரசைக் கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டன பொதுக்கூட்டம் அறிவித்திருக்கிறார். இந்த கண்டனக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அந்த கூட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு ஒன்றிய செயலாளர். பகுதி செயலாளர் உள்ளிட்ட பல பேர் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள்.

இந்த வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் வீட்டிற்கெல்லாம் நள்ளிரவில் சென்று கைது செய்கிறார்கள். ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நபரை யார் என்றே தெரியவில்லை நள்ளிரவில் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் கேட்டால் இதில் எங்களுக்கு தொடர்பில்லை என்கிறார்கள். இதற்காக ஸ்பெஷல் டீம் போடப்பட்டுள்ளது அவர்கள் தான் கைது செய்து இருப்பார்கள் என்று சொல்கிறார்கள்.இப்போதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்றேதெரியவில்லை. அதேபோல் கார்த்தி என்ற பையன் மீது கேஸ் இருக்கிறது, அவரை பிடிக்க முடியவில்லை என்பதற்காக அவரது அப்பா ஹார்ட் பேஷண்டை கைது பண்ணி விட்டார்கள். இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

karur Political
இதையும் படியுங்கள்
Subscribe