தமிழக அரசை மனதார பாட்டுகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 12 ஆம் வகுப்புகளிலும், பட்டப்படிப்பிலும் தமிழில் படித்தவர்களுக்கே தமிழகத்தின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டமியற்றியிருப்பதை முழுமனதோடு வரவேற்கிறேன்.

seeman

பன்னெடுங்காலமாக தமிழர் நிலமெங்கும் கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் செய்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை முழக்கம் இன்று செயலாக்கம் பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. சட்டமியற்றிய தமிழக அரசின் இச்செயல்பாட்டை மனதார பாராட்டுகிறேன்.

Advertisment

உடனடியாக இந்த ஆண்டிலிருந்தே இச்சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இரண்டாம் பிரிவு பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்வித்தாள் நீக்கப்பட்ட புதிய பாடத் திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.