மாநிலத்தின் ஃபிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொண்டிருக்கிறேன் என மோடியின் ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி பதிலளித்துள்ளார்.

Advertisment

kumarasamy

நாம் ஃபிட்டாக இருந்தால் நாடு ஃபிட்டாக இருக்கும் என்ற ஃபிட்னஸ் சேலஞ்சினை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிமுகம் செய்தார். அதன்படி, ஒருவர் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு அதில் புதிய நபரை டேக் செய்யவேண்டும். ராஜ்யவர்தன் சிங் விராட் கோலி, சாய்னா நேவாலை டேக் செய்ய, விராட் கோலி பிரதமர் மோடியை டேக் செய்தார். இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இன்று தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிக்கா பத்ராவை டேக் செய்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் அலுவலகத்தின் வாயிலாக குமாரசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, என் உடல்நலன் சார்ந்த தங்களின் அக்கறைக்கு நன்றி. நான் பெருமைப்படுகிறேன். உடல்நலன் என்பது அனைவருக்கும் அவசியம் என்பதை நான் அறிவேன்; அதற்கான இந்த முன்னெடுப்பையும் ஆதரிக்கிறேன். எனது உடல்நலனுக்காக தினமும் ட்ரெட்மில் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்கிறேன். அதைவிடவும் அதிகமாக மாநிலத்தின் ஃபிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன்; அதில் உங்கள் ஆதரவும் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.