காங்கிரஸ் கட்சியின் கருணையால் மட்டுமே தனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

kumarasamy

கர்நாடக மாநிலத்தின் 24ஆவது முதல்வராக ம.த.ஜ. - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ம.த.ஜ. தலைவர் குமாரசாமி மே 24ஆம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்று ஐந்து நாட்கள் ஆனபின்னும், இன்னமும் அம்மாநிலத்தின் அமைச்சரைவை விரிவாக்கம் இழுபறியாகவே உள்ளது.

Advertisment

காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், ம.த.ஜ. ஆட்சியமைக்க ஆதரவு தந்தது. ஆனாலும், அமைச்சரவையில் முக்கிய இலாக்காகளை காங்கிரஸ் தரப்பு கோருவதால் இந்த இழுபறி நீடிப்பதாக தகவல்கள் தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் நாடுதிரும்பிய பிறகே அமைச்சரவை விரிவாக்கம் குறித்த தகவல்களும் வெளிவரும்.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கேட்கப்பட்டபோது, ‘நான் காங்கிரஸ் கட்சியின் கருணையால் மட்டுமே நான் ஆட்சிமைத்திருக்கிறேன். மாநிலத்தின் மேம்பாடு விவகாரத்தில் எனது கடமை என்பது வேறு விஷயம். முதலமைச்சராக எனது பணிகளை செய்யவே விரும்புகிறேன்’ என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment