Advertisment

நான் அமமுகவில் தான் இருக்கிறேன் மாறவில்லை!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். நடிகரும், அரசியல்வாதியுமான ரஞ்சித் பாமகவில் இருந்து வெளியேறி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறி திமுக, அல்லது பாஜகவில் இணையபோகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

Advertisment

ammk

இதனையடுத்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்த நடிகர் ரஞ்சித், நான் அமமுகவில் இருந்து வெளியேறியதாக கடந்த ஒரு வாரமாக என்னைப்பற்றி தவறான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. நான் தற்போது அமமுகவில் தான் இருக்கிறேன். நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. அமமுகவில் சேர்ந்து எந்தவித ஏமாற்றமும் அடையவில்லை. தற்போதைக்கு அமமுகவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.

Advertisment
politics ranjith actor pmk ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe